Published : 20 Sep 2020 07:45 AM
Last Updated : 20 Sep 2020 07:45 AM

காஷ்மீர் வர்த்தகர்களுக்காக ரூ.1,350 கோடி சிறப்பு நிதி தொகுப்பு: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பலஆண்டுகளாக அங்கு தீவிரவாதத்தால் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் நலிவடைந்த பிற துறைகளையும் மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்காக, வர்த்தகர்களுக்கு ரூ.1,350 கோடிக்கான சிறப்பு நிதித் தொகுப்பை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று அறிவித்தார்.

அதன்படி நடப்பு நிதியாண்டில் 6 மாதங்களுக்கு கடன் பெற்றுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கான வட்டியில் 5 சதவீதத்தை அரசே செலுத்தும் என்று மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

இது வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் கைவினை தொழில் துறையில் பணியாற்றுவோருக்கு அதிகபட்ச கடன் வரம்பு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நீட்டிக்கப்படும். அதில் 7 சதவீத வட்டியையும் அரசு வழங்கும்.

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x