Published : 18 Sep 2015 05:03 PM
Last Updated : 18 Sep 2015 05:03 PM
பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு ஏஜென்சியைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டதில் குஜராத் சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர் ஒருவர் பலியானார்.
இந்திய மீனவர் படகு எல்லையை தாண்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்ன என்பது பற்றிய முழு விவரம் தெரியவில்லை.
இதனையடுத்து இந்திய கடலோரக் காவற்படை கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
கொலையுண்ட மீனவர் பெயர் இக்பால் பட்டி என்று தெரியவந்துள்ளது. படகில் இன்னொரு மீனவரும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இங்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது போல் அங்கு குஜராத் கடல் எல்லையில் பாகிஸ்தான் படையினர் இந்திய மீனவர்களை சிறைபிடிப்பதும், பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படையினர் சிறைபிடிப்பதும் வழக்கமான ஒன்றுதான், ஆனால் துப்பாக்கிச் சூடு மிகவும் அரிதானதே.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலியானதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீனவர்களைப் பாதுகாக்க தவறி விட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT