Published : 19 Sep 2020 11:10 AM
Last Updated : 19 Sep 2020 11:10 AM

மேற்கு வங்கம், கேரளாவில் சந்தேக அல் கொய்தா தீவிரவாதிகள் 9 பேர் கைது: என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி 

இடமிருந்து வலமாக கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் பெயர்: முர்ஷித் ஹசன், முசாரப் ஹுசைன், அபுசுபியான், இயான் அகமது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அல்-கொய்தா தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த தேடுதல் பணியானது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்.ஐ.ஏ தெரிவிக்கையில், “டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகத் தீவிரவாதிகள் 6 பேர்களாவார்கள், இவர்கள் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற மூவர் கேரளா, எர்ணாக்குளத்தில் வசித்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரப் ஹுசைன், நஜ்முஸ் சாகிப், அபு சுஃபியான், மைனுல் மோண்டல், லியு இயன் அகமட், அல் மாமும் கமல், அதிதுர் ரஹ்மான் ஆகியோர் அடங்குவர்.

பாகிஸ்தானில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பினால் இவர்கள் தீவிரவாதத்துக்கு இழுக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பல இடங்களில் நடந்திருக்க வேண்டிய குண்டு வெடிப்புகளை இந்தக் கைதுகள் மூலம் தடுத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x