Published : 17 Sep 2020 03:50 PM
Last Updated : 17 Sep 2020 03:50 PM
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ரோந்து செல்வதைத் தடுக்க இந்த பூமியில், உலகில் யாருமில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ரோந்து செல்லும் போது சீனப் படைகள் தடுத்ததாக செய்திகள் வந்தது குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஏ.கே. அந்தோணி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவம் ரோந்து செல்வது பாரம்பரியமானது, திட்டமிட்டு நடத்தப்படுகிறது. எல்லையில் இந்திய ராணுவத்தினர் ரோந்து செல்வதைத் தடுக்க உலகில், இந்த பூமியில் எந்தப் படையும் இல்லை.
நம்முடைய வீரர்கள், எல்லைக்காக தன்னுடைய இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். ரோந்து செல்லும் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த தேசம் பல போர்களைச் சந்தித்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அனைத்தையும் எதிர்கொள்ள முடியும்.
ரோந்துப் படைகள் சென்றபோது இடையூறுகள் ஏற்பட்டன, ரோந்து செல்வது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல்கல் நடந்தன உண்மைதான். ஆனால், திட்டமிட்டபடி ராணுவத்தின் ரோந்து நடந்து வருகிறது.
கட்டுப்பாட்டு எல்கைக் கோடு பகுதியில் இருக்கும் நிலையை சீனா மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டது, இந்திய ராணுவத்தை ஆத்திரமூட்டும் செயல்கள் கடந்த மாதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது சீன அரசு சொல்வதற்கும், அங்கு நடந்ததற்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.
எல்லைப் பிரச்சினையில் அமைதியான முறையில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் இந்தியாவின் இறையான்மையை பாதுகாக்கவேண்டிய சூழல் ஏற்படும்போது, எந்த நடவடிக்கையையும் எடுக்க இந்திய அரசு தயங்காது.
சீனா, இந்திய தரப்பில் ராணுவ உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடந்து வரும்போது, சீன ராணுவம் கடந்த மாதம் 29,30-ம் தேதிகளில் மீண்டும் பாங்காக் ஏரிப்பகுதியில் நிலையான பகுதிகளை மாற்ற முயற்சி மேற்கொண்டது. இந்திய ராணுவத்தை ஆத்திரமூட்டியது.
ஆனால், இந்திய ராணுவத்தினர் சூழலுக்கு தகுந்தார்போல், சரியான நடவடிக்கைகளை எடுத்து, தடுத்ததால், கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப்பகுதியில் நிலையான பகுதியை மாற்றும் சீன ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது. சீன அ ரசின் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருக்கிறது
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT