Published : 17 Sep 2020 11:24 AM
Last Updated : 17 Sep 2020 11:24 AM
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி காலை மாநிலங்களவையும், மதியம் லோக்சபாவும் கூடி நடைபெற்று வருகிறது.
இன்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்வி வருமாறு:
என்னுடைய தாயும், என் தம்பியும் கரோனா பாதித்து ஐசியுவில் இருந்து வருகின்றனர், எனவே கரோனாவின் பயங்கரம் என்னவென்று என் அனுபவம் எனக்குக் கற்றுத் தந்துள்ளது.
பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே அன்று கேள்வி எழுப்பினார். மகாராஷ்டிரா அரசு கோவிட்-19-ஐ கையாளுவது பற்றி விமர்சித்தார். ஆனால் நெருக்கமான பகுதியான தாராவி உட்பட பலபகுதிகளில் கரோனா பரவல் அபாயத்தை தடுத்திருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி வகுத்த விதிமுறைகளை மகாராஷ்ட்ரா அரசு கடைப்பிடித்து வருகிறது.
மத்திய அரசு பிபிஇ கவச உடைகள், உபகரணங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற கரோனா தடுப்பு உத்திகளுக்கான நிதியை மகாராஷ்டிராவுக்கு செப்.1 முதல் நிறுத்தியது.
இதனால் மகாராஷ்டிர அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.50 கோடி செலவாகிறது. மாநிலங்களுக்கு உதவுவதற்கு இல்லாமல் வேறு எதற்காம் பிஎம் கேர்ஸ்?
இவ்வாறு ராவத் கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT