Published : 18 Sep 2015 09:56 AM
Last Updated : 18 Sep 2015 09:56 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். தினமும் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆயினும் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏழுமலையானுக்கு தினமும் லட்டு பிரசாதம் மட்டுமின்றி பல்வேறு பிரசாதங்கள் நைவேத்தியங்களாக படைக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் பக்த பிரியர் மட்டுமல்ல. அவர் நைவேத்திய பிரியரும் கூட.
மூலவரான வெங்கடேச பெரு மாளுக்கு தினமும் 3 வேளை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. காலை 5 மணியளவில் முதல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. அதன்பின்னர் காலை 10 மணிக்கு மதிய நைவேத்தியமும், இரவு 7 மணிக்கு 3வது நைவேத்தியமும் படைக்கப்படுகின்றன.
‘மாத்ரு தத்யோதனம்’ என்றால் பெருமாளுக்கு மிகவும் பிரியமானது என்று பொருள். மூலவரின் சந்நதி முன் உள்ள குலசேகர ஆழ்வார் படியை தாண்டி, கற்ப கோயிலுக்குள் செல்வது பாலேட்டினால் தயாரிக்கப்பட்ட மாத்ரு தத்யோதனம் மட்டுமே. இந்த மாத்ரு தத்யோதனமும் பாதி உடைந்த புயத்தன் சட்டியில் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. நிறைவாக ஏகாந்த சேவையின்போது, பல வகை பழங்கள், சர்க்கரை, தேனால் தயாரிக்கப்பட்ட ‘மேவா’, சர்க் கரை, முந்திரி, பாதம், உலர்ந்த திராட்சை, ஏலக்காய், கசகசா, உலர்ந்த கொப்பரையால் தயாரிக்கப் பட்ட ‘பஞ்ச அதிரசம்’ படைக்கப் படுகிறது. மேலும் சர்க்கரை கலந்த சூடான பசும் பாலும் இவைகளுடன் படைக்கப்படுகிறது.
பெருமாளின் தாயாரான வகுலமாதா சிலையின் முன்னிலையில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்படுகின்றன. கோயிலில் உள்ள மூலவரின் சந்நதிக்கு அருகே உள்ள ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக்கப்படும் அறையில் உள்ள வகுலமாதா வின் சிலையின் முன் முதலில் நைவேத்திய பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே ஏழுமலையானுக்கு படைக்கப் படுகின்றன. நைவேத்தியங்களை தயாரிப்பவர்கள் ’கமே கார்லு’ என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் மிக சுத்தமாக பிரசாதங்களை தயாரிக்கின்றனர்.லட்டு, வடை, போளி, பணியாரம், அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி போன்ற மாவினால் தயாரிக் கப்படும் பிரசாதங்கள், கோயில் வளாகத்தில் உள்ள வெள்ளி வாசலுக்கு அருகே உள்ள சம்ப ங்கி பிரகாரம் அருகே உள்ள ’போட்டு தாயார்’ சிலை முன் தயாரிக்கப்படுகிறது.
வார சேவையில், திங்கள் கிழமை நடைபெறும் விசேஷ பூஜையில் பெரிய வடை, லட்டு, அன்ன பிரசாதங்களும், புதன் கிழமை நடைபெறும் கலசாபிஷே கத்தில், ஜீரா அன்னம் மற்றும் அன்ன பிரசாதங்களும், வியாழக் கிழமை நடைபெறும் திருப்பா வாடை சேவையின்போது, 450 கிலோ அரிசியில் தயாரிக் கப்பட்ட புளியோதரை, ஜிலேபி, பெரிய முறுக்குகளும் நைவேத்தி யமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.
வெள்ளிக்கிழமை, போளி, இனிப்பு பணியாரமும், ஞாயிற்று கிழமைகளில் மட்டும், ஞாயிற்று கிழமை பிரசாதம் எனும் பெயரில் சிறப்பு பிரசாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இதனை ‘அமிர்த கலசம்’ என்றும் அழைக் கின்றனர். மூலவருக்கு படைத்த பின்னர் சந்நதிக்கு எதிரே உள்ள கருடாழ்வாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில், மூலவ ருக்கு தோசைகள், வறுத்த கடலையில் தயாரித்த சுண்டல், பச்சை பருப்பு பானகம் போன்ற வைகள் சமர்பிக்கப்படுகின்றன. மார்கழி மாதத்தில், அன்ன பிரசாதங்கள் மற்றும் வெல்ல தோசைகள் படைக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் 3 விதமாக தயாரிக்கப்படுகிறது. ஆஸ்தானம் லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என இவை அழைக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT