Last Updated : 16 Sep, 2020 09:18 PM

2  

Published : 16 Sep 2020 09:18 PM
Last Updated : 16 Sep 2020 09:18 PM

விண்வெளி ஏவுதளத்திற்கான நிலம் 6 மாதங்களில் தமிழக அரசு ஒப்படைக்கும்: மக்களவையில் அமைச்சர் ஜிதேந்தர்சிங் தகவல்

புதுடெல்லி

தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி ஏவுதளத்திற்கான நிலத்தை தமிழக அரசு 3 மாதங்களில் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலில் மத்திய விண்வெளி மற்றும் அனுசக்தித்துறை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்தர்சிங் இன்று வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 3 ஆவது நாளில் திமுக எம்.பியான கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் விண்வெளி ஏவுதளம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி தொகுதியின் எம்.பியான கனிமொழி, ‘‘குலசேகரப்பட்டினத்தில் அமைக்க திட்டமிடப்படும் விண்வெளி ஏவுதளம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதா? பணிகள் எந்த கட்டத்தை எட்டியிருக்கிறது? இத்திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகள் தொடங்கிவிட்டதா? இத்திட்டம் எப்போது நிறைவடையும்?’’ எனக் கேட்டிருந்தார்

இதற்கு மத்திய பணியாளர், குறைத்தீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் ஜிதேந்தர்சிங் அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

‘‘மத்திய விண்வெளித்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு, தூத்துக்குடி மாவட்டத்தில் மாதவன்குறிச்சி, படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில் இருந்து, அரசு ஆணை 175 இன்படி, கடந்த வருடம் அக்டோபர் 9 இல் 961.66.90 ஹெக்டேர் நிலங்களை இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

இவற்றில், 904.24.65 ஹெக்டேர் நிலங்கள் பட்டா வழங்கப்பட்ட நிலங்கள். 57.42.25 ஹெக்டேர் நிலங்கள் அரசு புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளன. இதன் நிலஅளவீடு, 431.87.74 ஹெக்டேர் நிலங்களில் முடிக்கப்பட்டு விட்டது.

நிலஆர்ஜிதம், இழப்பீடு சட்டத்தின்படி, 431.876.74 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த, 30.07.2020 அன்று அரசாணை 167 இல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களுக்கான அளவீட்டுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்த நிலங்களை தமிழக அரசு, ஆறு மாதங்களில் ஒப்படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஏவுதளம் அமைக்கும் பணி, சிக்கலான கட்டுமானம் என்பதால், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இப்பணி நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.’’ என அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x