Published : 12 Sep 2015 08:29 AM
Last Updated : 12 Sep 2015 08:29 AM
போலி பெண் பெயர்களில் பேஸ்புக்கில் பணக்கார பெண்களுக்கு வலை விரித்தார் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். இவர் வலையில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்கள் சிக்கினர். பின்னர் அவர்களிடம் ஆபாச படங்கள் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்து, பணம் பறித்த வாலிபரை நேற்று ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த, 3ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் முஜீத் (23). இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார். பின்னர், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறி வைத்து பழகினார். பல பெண்கள் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகி வந்தனர். பேஸ்புக்கில் இருக்கும் அவர்களுடைய புகைப்படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து, அவைகளைக் காட்டி மிரட்ட ஆரம்பித்தார். இந்த புகைப்படம் வேண்டுமானால் உங்களுடைய உண்மையான ஆபாச படங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் சில மாணவிகள் பயந்து தங்களது செல்போன் களில் நிர்வாணமாக புகைப் படம் எடுத்து முஜீத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந் துள்ளது. அதன்பின்னர், உண்மை யான புகைப்படத்தை வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதில், சிலர் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். இது போன்று சுமார் 200 பெண்களுடன் பேஸ்புக்கில் தொடர்பு வைத்து கொண்டு அனைவருடனும் இதே போன்று மிரட்டி பணம் பறித்துள்ளார். இந்நிலையில் நேற்று இதில் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் சைபராபாத் காவல் நிலையத்துக்கு சென்று காவல் துறை ஆணையர் ஆனந்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு, அவர்களுடைய பெற்றோரை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இதனை தொடர்ந்து முஜீதை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
80 பேர் புகார்
நேற்று இரவுக்குள் முஜீத் மீது 80 பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார் செய்ய முன் வந் துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT