Published : 16 Sep 2020 07:57 AM
Last Updated : 16 Sep 2020 07:57 AM

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலான ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த தொழிலாளர் பற்றிய தகவல் இல்லை: மக்களவையில் மத்திய அரசு பதில்

புதுடெல்லி

கரோனா ஊரடங்கின்போது உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இல்லைஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே 1-ம் தேதி வரை 4 கட்டங்களாக 68 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது டெல்லி,மும்பை, கொல்கத்தா உள்ளிட்டபெருநகரங்களில் பணியாற்றியபுலம் பெயர் தொழிலாளர்கள்ஊரடங்கின்போது வேலையிழந்து வருமானம் இன்றி தவித்தனர். அவர்கள் நடைபயணமாக சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற தொழிலாளர்கள் சரக்கு ரயில் மோதிஉயிரிழந்தனர். பல்வேறு மாநிலங்களில் சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். நடைபயணமாக சென்றவர்களில் பலர் பசி, பட்டினி யால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரி ழந்தனர், அவர்களுக்கு மத்திய அரசு என்னென்ன உதவிகளை வழங்கியது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுத்துப்பூர்வ மாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்கள வையில் எழுத்துப்பூர்வமாக நேற்று முன் தினம் பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கின்போது சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழி லாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். அவர்களுக்கு தேவையான உதவிகளைஅந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

உயிரிழப்பு கட்டுக்குள் உள்ளது

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று மாநிலங்களவையில் கூறும்போது, “கரோனா வுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் காலம் வெகு தொலைவில் உள்ளது. இந்த நோய் பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது. தினமும் நோய்த் தொற்றுக்கு ஆளாவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு முறையே 3,320, 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x