Published : 16 Sep 2020 06:47 AM
Last Updated : 16 Sep 2020 06:47 AM

கரோனா செலவினங்களை ஈடுகட்ட எம்.பி.க்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி

கரோனா பாதிப்பால் அதிகரித்த செலவினங்களை ஈடுகட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப் பினா்களின் ஊதியத்தை ஓராண் டுக்கு 30 சதவீதம் குறைக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவை யில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மத்திய நாடாளுமன்ற விவ காரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி இந்த மசோதாவை மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவ சரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக் கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவா ரணம், உதவிகள் வழங்க வேண் டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்க ளவையில் நடைபெற்ற விவா தத்துக்குப் பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தொகுதி வளர்ச்சி நிதி

அப்போது பேசிய அமரா வதி தொகுதி எம்.பி.யும் நடிகையு மான நவ்னீத் ரவி ராணா, “இதற்காக என்னுடைய முழு ஊதியத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதே நேரத்தில் எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதிக்கு அரசு வழங்கும் நிதியைக் குறைக்க வேண்டாம். இது தொகுதி வளர்ச்சிக்கானது. எனவே, தொகுதி வளர்ச்சி நிதிக்கு வழக்கம் போல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்” என்றார். இதே கருத்தை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் பேசினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x