Published : 15 Sep 2020 12:15 PM
Last Updated : 15 Sep 2020 12:15 PM
அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூஜைக்காக கிரிக்கெட் வீரர் மொகமட் ஷமியின் மனைவி ஜகான் ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து சமூகவலைத்தளங்களில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்னம் உள்ளதாக பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமட் ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்
அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன.
இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத காரணத்தினால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
தன் மனுவில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன்.எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு பயமாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று பாதுகாப்பு கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT