Last Updated : 15 Sep, 2020 06:47 AM

 

Published : 15 Sep 2020 06:47 AM
Last Updated : 15 Sep 2020 06:47 AM

கரோனா பாதிப்பில் இருந்து 37.8 லட்சம் பேர் மீண்டனர்; குணமடைவோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம்: நாடாளுமன்ற கூட்டத்துக்கு வந்த 24 எம்.பி.க்களுக்கு தொற்று உறுதி

புதுடெல்லி

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து 37.8 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைவோர் எண்ணிக்கையில் உலகளாவிய அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச கரோனா வைரஸ் புள்ளிவிவரங்களை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகம் திரட்டி வெளியிட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரத்தின்படி, சர்வதேச அள வில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண் ணிக்கையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் நேற் றைய புள்ளிவிவரத்தின்படி, இந்தியா வில் 37.8 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 37.23 லட்சம் பேரும் 3-வது இடத்தில் உள்ள அமெரிக் காவில் 24.61 லட்சம் பேரும் குணமடைந் திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரேநாளில் 92,071 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித் துள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக 48 லட்சத்து 46,427 பேர் வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37 லட்சத்து 80,107 பேர் குணமடைந் துள்ளனர். 9 லட்சத்து 86,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 1,136 பேர் உயிரிழந்தனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 79,722 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை விவரம் வருமாறு:

மகாராஷ்டிராவில் 10 லட்சத்து 60,308 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 90,716 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் 4 லட்சத்து 59,445 பேர் பாதிக்கப்பட்டனர். 99,222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் 5 லட்சத்து 67,123 பேர் தொற்றுக்கு ஆளாகினர். தற்போது 95,072 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல் உத்தரபிரதேசத்தில் 68,122 பேர், ஒடிசாவில் 31,539 பேர், சத்தீஸ்கரில் 31,505 பேர், தெலங்கானா வில் 30,532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் 1 லட்சத்து 10,818 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் 30,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெல்லியில் 28,812, அசாமில் 28,161, மேற்குவங்கத்தில் 23,624, மத்திய பிரதேசத்தில் 20,487, ஹரியாணாவில் 20,079, பஞ்சாபில் 19,787, காஷ்மீரில் 17,481, ராஜஸ்தானில் 16,407, ஜார்க்கண்டில் 14,336, பிஹாரில் 14,113, உத்தராகண்டில் 10,519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 எம்.பி.க்களுக்கு தொற்று

இதனிடையே, 24 எம்.பி.க்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தின் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வமும் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் கரோனா தடுப்பு ஏற்பாடுகள் தீவிர மாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை யொட்டி முதல்நாள் கூட்டத்துக்கு வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்துகொள்ள அறி வுறுத்தப்பட்டது. இதை உறுப்பினர்கள் எந்த இடத்திலும் செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டது. மேலும் நாடாளு மன்ற அலுவலகக் கட்டிடத்திலும் பரி சோதனைக்கு வசதி செய்யப் பட்டிருந்தது.

இதையொட்டி, பல்வேறு கட்சி களின் எம்.பி.க்கள் கரோனா பரி சோதனை செய்துகொண்டனர். இதற் கான முடிவு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியானது. இதில் கடந்த 12-ம் தேதி முதல் நேற்று 14-ம் தேதி வரை பரிசோதனை செய்துகொண்ட எம்.பி.க்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு நேற்று காலை மக்களவை கூட்டத் துக்கு முன்பாகவே முடிவுகள் தெரிவிக் கப்பட்டன. எனினும் இதை அறியாத சிலரும் நேற்று முன்தினம் பரி சோதனை செய்துகொண்டவர்களும் நேற்று காலை நாடாளுமன்றம் வந்திருந்தனர்.

இதில் காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. ஜி.செல்வமும் ஒருவர். இவர் நேற்று காலை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக திமுக நடத்திய போராட்டத்தில் பற்கேற்றிருந்தார். அப் போது அவருக்கு கரோனா தொற்று தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட் டது. இதையடுத்து அங்கிருந்து உடனே புறப்பட்ட செல்வம் தனது அறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனால் நேற்று காலை போராட் டத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த எம்.பி.க்கள் சிலருக்கும் கரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு ஆளான எம்.பி.க்களின் அதிகபட்சமாக 12 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2), சிவசேனா (1), லோக்தாந்திரிக் கட்சி (1), திமுக (1) என பிற கட்சி எம்.பி.க்களும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றன்றத்தில் நேற்று கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக எம்.பி.க்கள் தங்கள் வருகைப் பதிவேட்டில் நேரில் கையொப்பம் இடுவதற்கு பதிலாக ‘Mobile Attendance App’ என்ற செயலி நாடாளுமன்றத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதுவரை வெளியான தகவலின்படி மக்களவை எம்.பி.க்கள் 17 பேரும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனை என்பது ஒரு வரின் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அது தொடர்பான தகவல் அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் எண் ணிக்கை 24-ஐ விட கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x