Published : 14 Sep 2020 07:54 PM
Last Updated : 14 Sep 2020 07:54 PM
2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள், பரிந்துரைகளை நாளை (2020 செப்டம்பர் 15) வரை சமர்ப்பிக்கலாம்.
பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில் (https://padmaawards.gov.in) மட்டுமே மனுக்கள்/பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகள் ஆகும். 1954-இல் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படும்.
பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றி உள்ளவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT