Published : 14 Sep 2020 09:39 AM
Last Updated : 14 Sep 2020 09:39 AM

டெல்லி போலீஸாரின் செயல் கேலிக்கூத்து: டெல்லி கலவரம் தொடர்பாக ப.சிதம்பரம் ட்வீட்

வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸ் சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சுவராஜ் அபியனின் யோகேந்திர யாதவ் மற்றும் பல அரசியல் தலைவர்களின் பெயரை சேர்த்து உள்ளது.

இது தொடர்பாக கண்டனக்குரல்கள் எழும்ப ப.சிதம்பரமும் தன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “தகவல் மற்றும் குற்றப்பத்திரிகைக்கு இடையில் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தல் எனப்படும் முக்கியமான படிகள் உள்ளன என்பதை டெல்லி காவல்துறை மறந்துவிட்டதா?" முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் டெல்லி கலவர வழக்கில் துணை குற்றப்பத்திரிகையில் சீதாராம் யெச்சூரி மற்றும் பல அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை பெயரை சேர்ப்பதன் மூலம் டெல்லி காவல்துறை குற்றவியல் நீதி முறையை கேலிக்குள்ளாக்கியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாஃப்ராபாத், ஷாகுர் பஸ்தி, சிவ் விஹார், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி 24-26 வரை பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 581 பேர் காயமடைந்தனர்.

இதன் துணை குற்றப்பதிரிகையில் டெல்லி போலீசார் இவர்கள் பெயரைச் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் எழுப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x