Published : 12 Sep 2020 04:13 PM
Last Updated : 12 Sep 2020 04:13 PM
விமானத்துக்குள் இருந்து யாரேனும் புகைப்படம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட விமானத்துக்கு அந்த வழித்தடத்தில் பறக்க இரு வாரங்களுக்குத் தடைவிதிக்கப்படும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சண்டிகர்- மும்பை விமானத்தில் நடிகை கங்கனா ரணாவத் கடந்த இரு நாட்களுக்கு முன் இன்டிகோ விமானத்தில் பயணித்தார். அப்போது, ஊடகத்தினர் பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக விலகலை கடைபிடிக்காமலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோ வெளியாகின. இது தொடர்பாக இன்டிகோ நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, டிஜிசிஏ இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சிவில்விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ இப்போது இருந்து முடிவு செய்யப்படுகிறது என்னவென்றால், பயணிகள் விமானத்தில் யாரேனும் விதிமுறைகளை மீறி யாரேனும் விமானத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுத்தது கண்டறியப்பட்டால், அந்த விமானம் அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் இருவாரங்கள் இயக்க தடை விதிக்கப்படும்.
விமான விதி 1937, விதி 13-ன் கீழ் விமானத்தில் பயணிக்கும் எந்த பயணியும் விமானத்துக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது. விமானப்போக்குவரத்து அமைச்சம், டிஜிசிஏ அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல்கூடாது.
இந்த விதிமுறைகள் இருந்தபோதிலும், சில சமயங்களில், விமான நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறிவிட்டன. இதை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் என்பதில் தீவிரம் இல்லை.
இதுபோன்ற விதிகளை பின்பற்றாமல் இருத்தலால் உயர்ந்த பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் ஆனால், அதை அனுமதிக்ககூடாது.” எனத் தெரவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் விமானத்துக்குள் இருந்து ஏதேனும் ஒரு பயணி புகைப்படம் எடுத்தாலும், அவர் மீது விமானநிறுவனங்கள் விமானவிதிகள் நடவடிக்கை எடுக்க முடியும். அந்த பயணியை விமானத்தில் பறக்க குறிப்பிட்ட காலத்துக்கு தடை விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT