

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு இம்முறை ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் வரு டாந்திர பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபி நாத், திருப்பதி காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் தலை மையில் கலந்தாய்வு கூட்டம் திருமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கோபிநாத் கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறஉள்ளது. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின்போது சுவாமியின் மாடவீதிஉலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்கள் இம்மாதம் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பிரம்மோற்சவத்தின்போது அனுமதிக்கப் படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.