Published : 12 Sep 2020 08:22 AM
Last Updated : 12 Sep 2020 08:22 AM

தினமும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் பங்கு 57%

புதுடெல்லி

நாட்டின் தினசரி கரோனா வைரஸ் தொற்றில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் 57 சதவீத புதிய வைரஸ் தொற்று பதிவாகிறது.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நாடுமுழுவதும் ஒரே நாளில் 96,551பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,62,414 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 35,42,663 பேர் குணமடைந்துள்ளனர். 9,43,480 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் ஒரே நாளில்1,209 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 76,271 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் தினசரி கரோனா வைரஸ் தொற்றில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், தமிழகம் ஆகிய 5 மாநிலங்களில் 57 சதவீத புதிய வைரஸ் தொற்று பதிவாகிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதாவது மகாராஷ்டிராவில் 24.28%, ஆந்திராவில் 10.54%, கர்நாடகாவில் 9.55%, உத்தர பிரதேசத்தில் 7.24%, தமிழகத்தில் 5.73 சதவீதம் வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இதர மாநிலங்களில் 42.67 சதவீத வைரஸ் தொற்று பதிவாகிறது.

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாள்தோறும் மகாராஷ்டிராவில் 20.1%, தமிழகத்தில் 14.2%,ஆந்திராவில் 9.9%, கர்நாடகாவில் 8.7%, உத்தர பிரதேசத்தில் 6.5 சதவீதம் பேர் குணமடைகின்றனர்.

முதலிடத்தில் மகாராஷ்டிரா

தேசிய அளவிலான கரோனா வைரஸ் தொற்றுபாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அந்த மாநிலத்தில் புதிதாக 23,446 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. இதுவரை 9,90,795 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,00,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,61,798 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 495 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 28,282 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் புதிதாக 9,217 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அங்கு 4,30,947 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 3,22,454 பேர்குணமடைந்துள்ளனர். 1,01,556 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,937 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 10,176 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,37,687 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்4,35,647 பேர் குணமடைந்துள்ளனர். 97,338 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 66,317, தெலங்கானாவில் 32,195, ஒடிசாவில் 30,529, அசாமில் 29,332, சத்தீஸ்கரில் 29,332, கேரளாவில் 27,877 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 25,416, மேற்குவங்கத்தில் 23,377, மத்திய பிரதேசத்தில் 18,433, ஹரியாணாவில் 18,332, பஞ்சாபில் 18,088, குஜராத்தில் 16,198, ராஜஸ்தானில் 15,702, ஜார்க்கண்டில் 15,447, பிஹாரில் 15,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x