Published : 11 Sep 2020 12:30 PM
Last Updated : 11 Sep 2020 12:30 PM
தேசிய கல்வி கொள்கை குறித்த பள்ளிக் கல்வி மாநாட்டில் இரண்டாவது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
தேசிய கல்வி கொள்கை-2020-இன் கீழ் உயர்கல்வியில் மாபெரும் மாற்றங்கள' என்னும் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7 அன்று தொடவக்கவுரை ஆற்றினார்.
மேலும், 'தேசிய கல்வி கொள்கை-2020'-ஐ பற்றிய ஆளுநர்கள் மாநாட்டிலும் செப்டம்பர் 7 அவர் உரையாற்றினார்.
முந்திய கொள்கை அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை-2020, பள்ளி மற்றும் உயர்கல்வியில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்குவதை இலக்காக கொண்டுள்ளது.
இந்தியாவை சமமான மற்றும் துடிப்பான அறிவு மையமாக மாற்றுவதே இந்த கொள்கையின் லட்சியமாகும். இந்தியாவை சர்வதேச வல்லரசாக மாற்றும் வகையில் கல்வி அமைப்பை பங்கேற்க செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இணைய வழி மூலமாக, செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டை கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இந்த இரண்டு நாள் மாநாட்டின் முதல் நாளன்று பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் சில அம்சங்களை ஆக்கபூர்வமான முறையில் ஏற்கனவே எப்படி அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள் என்பதை முதல்வர்களும் ஆசிரியர்களும் எடுத்துரைத்தனர்.
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் இதர ஆக்கப்பூர்வமான ஆசிரியர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வி குறித்து உள்ள சில முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைகவ் தளத்தில் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளும் இதில் பகிரப்படும்.
இந்த மாநாட்டில் இரண்டாவது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT