Published : 10 Sep 2020 01:24 PM
Last Updated : 10 Sep 2020 01:24 PM
பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஃபேல் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ‘மிராஜ் 2000-த்தின் சேவைச் சாதனையை ரஃபேல் முறியடிக்கும்’என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தை திடீரென கையில் எடுத்த தோனி, அதில், “உலகின் சிறந்த போர் விமானமானத்திற்கு உலகின் சிறந்த போர் விமானிகள் கிடைப்பார்கள். நம் விமானிகளின் கைகளில் இந்திய விமானப்படையின் பலதரப்பட்ட போர் விமானங்களுடன் ரஃபேலின் அழிக்கும் திறன் இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்வீட்டில், இந்த அபாரமான 17 ஸ்க்வாட்ரனுக்கு (கோல்டன் ஏரோஸ்) வாழ்த்துக்கள், ரஃபேல் போர் விமானம் மிராஜ் 2000 சேவைச் சாதனையை முறியடிக்கும் என்று நம்புவோம். ஆனால் Su30MKI தான் எனக்குப் பிடித்தது, வீரர்களுக்கு கடுமையாகச் சண்டையிட ஒரு புதிய இலக்கு. சூப்பர் சுகாய் அளவுக்கு புத்தாக்கம் பெறுவதற்காக ’பார்வைக்கு அப்பாலான தொலைவெல்லை ஏவுகணை’ (பிவிஆர்) ஈடுபடுத்தலுக்குக் காத்திருக்கவும் என்று எம்.எஸ்.தோனி ட்வீட் செய்துள்ளார்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள், அம்பாலா விமானப்படைத் தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக்கில் உள்ள இந்திய-சீனா எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஃபேல் போர்விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது, விமானப்படைக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும், பலத்தையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT