Published : 09 Sep 2020 08:52 PM
Last Updated : 09 Sep 2020 08:52 PM
மத்தியப்பிரதேசத்தின் சன்வாரில் நேற்று இரவு கலசயாத்திரை நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு மிதிகளை மீறியதாக அம்மாவட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
ம.பி. மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக சுமார் 50 இடங்களில் கலசயாத்திரை நடைபெற்று வருகிறது. இதை இந்தோர் மாவட்டம் சன்வரில் பாஜக முன்னிறுந்து நடத்தியது.
இதில், நேற்று இரவு நூற்றுக்கணக்கான பெண்களுடன் கலசயாத்திரை நடைபெற்றது. இதில், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் என கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.
இதனால், ம.பி. மாநிலக் காவல்துறை சார்பில் இந்தோர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாஜகவின் மாவட்ட தலைவரான ராஜேஷ் சோன்கர், முன்னாள் மாவட்ட தலைவர்களான பகவான் பார்மர் மற்றும் சுபாஷ் சவுத்ரி உள்ளிட்ட ஆறு பேர்களின் பெயரகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து பாஜக மாவட்ட ராஜேஷ் சோன்கர் கூறும்போது, ‘இந்த யாத்திரைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால், காங்கிரஸார் அளித்த நிர்பந்தம் காரணமாக என்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதை நாம் நீதிமன்றத்தில் சந்தித்து எங்கள் தரப்பின் வாதத்தை முன்வைப்போம். யாத்திரையில் கலந்துகொண்ட பெண்களுக்காக முகக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டன.’ எனத் தெரிவித்தார்.
இதே நகரில் கடந்த வாரம் புதிதாகக் காங்கிரஸ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதில் கரோனா பரவல் தடுப்பு விதிகள் மீறப்பட்டதாக 34 காங்கிரஸார் மீதும் மபி காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT