Published : 09 Sep 2020 03:29 PM
Last Updated : 09 Sep 2020 03:29 PM
வேலையின்மையில் தவித்துவரும் இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் வருத்தம் தெரிவிக்கும் வகையிலும், வேலையின்மையை உணர்த்தும்வகையில் இன்று இரவு 9 மணிக்கு 9 மணிக்கு வீடுகளில் விளக்கை அணைக்க வேண்டும் என்று மாநில மக்களுக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவரும், முன்னள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ட்விட்ரில் இன்று பதிவி்ட்ட கருத்தில் “ இளைஞர்கள் ஒரு தீர்மானத்தோடு இருக்கும் போது, மக்களை அடக்கி ஆள்பவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
வாருங்கள், வேலையின்மை எனும் இருளைச் சந்தித்துவரும் இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து டார்ச் லைட், அல்லது தீபத்தை ஏற்றுவோம்” என வேண்டுகோள் விடுத்து, “#9Baje9Minute, #NoMoreBJP என்று ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.
இதே கருத்தை பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாட்டில் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், பிஹார் அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மக்கள் அனைவரும் இன்று இரவு 9மணி்க்கு வீட்டின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். வீட்டின் மாடி, பால்கனி அல்லதுவெளியே வந்து 9 மணிநிடங்கள் டார்ச்லைட், விளக்கு ஏந்தி எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் , மக்கள் இதை செய்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
நானும், என்னுடைய தாய் ராப்ரி தேவி ஆகியோர் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அணைத்து வீட்டின் மாடியில் விளக்கு ஏந்தி வேலையின்மைக்கு எதிராக எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும், தனியார்மயமாக்கலைக் கண்டித்தும் நாங்கள் இந்த விளக்கை ஏந்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வரும் அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தேஜஸ்வி தீவிரமாக கையிலெடுத்துள்ளார்.
இதற்காக தனியாக இணையதளம் ஒன்றை உருவாக்கியும், இலவச தொலைப்பேசி எண்ணை உருவாக்கியும், வேலையில்லாத இளைஞர்கள் இதில் பதிவு செய்யக் கோரியுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இதில் பதிவு செய்த இளைஞர்களுக்கு உறுதியாக வேலை உருவாக்கித் தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT