Published : 09 Sep 2020 07:26 AM
Last Updated : 09 Sep 2020 07:26 AM

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம் கவலை

இடம்: பெங்களூரு. | கோப்புப் படம்.

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் எகிறி வருகிறது, இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த பல்வேறு ஊரடங்கு தளர்வுகளும் பெருமளவு செய்யப்பட்டுள்ளன.

இதனயடுத்து மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை விடாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் இதில் அலட்சியம் காட்டுவதாக மாநிலங்களிலிருந்து புகார்கள் வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, சுகாதார அமைச்சகத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவரும், 'நிதி ஆயோக்' அமைப்பின் உறுப்பினருமான, வி.கே.பால் கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு, மக்களிடையே தயக்கமும், பயமும் நிலவுகிறது. இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கெல்லாம் கொரோனா அறிகுறி உள்ளதோ, அவர்கள், தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை அதிகரித்தால் மட்டுமே, கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும

முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை பின்பற்றுவது, கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.ஆனால், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில், மக்களிடையே அலட்சிய போக்கு இருப்பதாக, பெரும்பாலான மாநிலங்களில் இருந்து, தொடர்ந்து புகார்கள் வருகின்றன, இவ்வாறு, அவர் கூறினார்.

சுகாதார அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன் கூறும்போது, “நம் நாட்டில், 10 லட்சம் பேரில், 3,102 பேருக்குத் தான், கரோனா பாதிப்பு உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பில், நாம் விகிதாச்சாரம் மிகவும் குறைவு. சர்வதேச அளவில், சராசரியாக, 10 லட்சம் பேரில், 115 பேர் கரோனாவால் பலியாகின்றனர். ஆனால், நம் நாட்டில், இந்த விகிதாச்சாரம், 10 லட்சம் பேரில், 53 இறப்பு என்ற அளவில் தான் உள்ளது”, இவ்வாறு, அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x