Published : 07 Sep 2020 09:22 AM
Last Updated : 07 Sep 2020 09:22 AM
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.
கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமாரின் மகள் திஷா குமார் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனால் அவரது ஒரு வயது மகன் விக்ராந்த், தனது தாத்தா சுரேஷ் குமாரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கரோனா பணி காரணமாக 3 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வரும் திஷா, தனது மகனை தொடாமல் தூரத்தில் நின்று பார்த்துவிட்டுச் செல்கிறார். அப்போது விக்ராந்த் தனது தாயிடம் செல்ல வேண்டும் என அழுதாலும், அவரை தூக்க முடியாமல் திஷா குமார் கண் கலங்கியுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா முன்கள பணியாளராக பணியாற்றும் திஷா தனது ஒரு வயது மகனை தொடாமல், தூரத்தில் நின்று கலங்கிய கண்களோடு பார்த்துவிட்டுச் செல்வது உருக்கமாக இருக்கிறது. தினமும் தாயிடம் போக விக்ராந்த் அழுது துடித்தாலும், கரோனா பரவல் அச்சம் காரணமாக சாவித்ரி அவனை தாயிடம் விடுவதில்லை. இந்த உருக்கமான காட்சியை பார்க்கும்போது இதயம் கலங்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT