Published : 06 Sep 2020 08:02 PM
Last Updated : 06 Sep 2020 08:02 PM

கேரளாவில் இன்று 3,082 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 3,082 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இன்று கண்டறியப்பட்டவர்களில், 2,844 பேர் தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 189 நோய்த்தொற்றின் மூலத்தைக் கண்டறிய முடியவில்லை. அவர்களில் 56 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 132 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்துள்ளனர். 50 சுகாதார ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த நோய்க்கு சிகிச்சையில் உள்ள 2,196 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

''சமீபத்தில் 10 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் இறந்தவர்கள் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி (70), திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதா (58), குமாரதாஸ் (68), மனோகரன் (56) & ஓமனா (66), கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த கம்முகுட்டி (58) & சவுதா (58), கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.பி.ஜனார்தனன் (69), ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அனியன் குஞ்சு (61), காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெபதிமா (84) ஆவர். ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பிறகு அதிகமான இறப்புகள் உறுதி செய்யப்படும்.

இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மாவட்ட வாரியான விவரம்:

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 528 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 324 பேர், கொல்லம் மாவட்டத்தில் இருந்து 328 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 281 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 264 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 221 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 218 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 200 பேர், கண்ணையூர் மாவட்டத்தில் 195 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 169 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 162 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 113 பேர், வயநாடு மாவட்டத்தில் 40 பேர், மற்றும் இடுக்கி மாவட்டத்தில் 39 பேர்.

உள்நாட்டுப் பரவலில் தொற்று ஏற்பட்டவர்கள் மாவட்ட வாரியான விவரம்:

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 515 பேர், கொல்லம் மாவட்டத்தில் இருந்து 302 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 297 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 276 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 253 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 203 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 200 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 190 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 169 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 157 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 126 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 94 பேர், வயநாடு மாவட்டத்தில் 35 பேர், இடுக்கி மாவட்டத்தில் 27 பேர்.

பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மாவட்டவாரியாக:

கண்ணூர் மாவட்டத்தில் 20 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 9 பேர், கொல்லம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா ஆறு பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் மூன்று பேர், பத்தனம்திட்டா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா இரண்டு பேர், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா இரண்டு பேர்.

சோதனையில் எதிர்மறை ரிப்போர்ட் வந்து நோய் குணமானவர்கள் மாவட்ட வாரியாக:

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 618 பேர், கொல்லம் மாவட்டத்தில் 204 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 88 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 36 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 130 பேர், இடுக்கி மாவட்டத்தில் 19 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 185 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 145 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 95 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 202 பேர், கோழிக்கோடு மாவட்டத்திலிருந்து 265 பேர், வயநாடு மாவட்டத்தில் 30 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 69 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 110 பேர்.

தற்போது வரை, 64,755 நபர்கள் கோவிட் நோயிலிருந்து குணமாகியுள்ளனர், தற்போது, ​​மாநிலத்தில் 22,676 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்''.

இவ்வாறு ஷைலஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x