Last Updated : 06 Sep, 2020 01:17 PM

3  

Published : 06 Sep 2020 01:17 PM
Last Updated : 06 Sep 2020 01:17 PM

ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90 ஆயிரத்து 632 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 41 லட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,065 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வரைபடம் வெளியிட்டு, விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரையில்லாத வகையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதாவது 70 ஆயிரத்து 72 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 77.23 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீதம் 1.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 68,584 பேரும், கடந்த 3-ம் தேதி 65,081 பேரும், ஆகஸ்ட் 24-ம் தேதி 57,469 பேரும் குணமடைந்தனர்.

கடந்த மே மாதம் 50 ஆயிரம் பேர் கரோனாவில் குணமடைந்த நிலையில், செப்டம்பரில் 31 லட்சத்தைக் கடந்து 31 லட்சத்து 7 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து அதிகமான மக்கள் குணமடைந்ததில் 5 மாநிலங்கள் 60 சதவீதப் பங்கு வகிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலம் 21 சதவீதமும், அதைத் தொடர்ந்து தமிழகம் 12.23 சதவீதமும், ஆந்திராவில் 11.91 சதவீதமும், கர்நாடகாவில் 8.82 சதவீதமும், உத்தரப் பிரதேசம் 6.14 சதவீதமும் பங்களிப்புச் செய்கின்றன.

நாட்டில் கரோனாவில் சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 395 பேர்தான். ஆனால், சிகிச்சை எடுத்து வருவோரைவிட 22 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தப் பாதிப்பில் சிகிச்சை எடுத்துவருவோர் சதவீதம் 21.04 சதவீதம் மட்டும்தான்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x