Last Updated : 06 Sep, 2020 11:14 AM

1  

Published : 06 Sep 2020 11:14 AM
Last Updated : 06 Sep 2020 11:14 AM

உ.பி.யில் 12 அமைச்சர்கள், ராஜ்நாத்தின் மகன் பங்கஜ் சிங் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று

பங்கஜ் சிங் | படம் உதவி: ட்விட்டர்

புதுடெல்லி

நான்காவது கட்டமான ஊரடங்கு தளர்வில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் உ.பி.யில் 6,692 பேருக்கு நேற்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், ராஜ்நாத் சிங்கின் மகனான பங்கஜ் சிங் எம்எல்ஏ மற்றும் உ.பி.யின் 12 அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதற்கு முன் ஒரே நாளில் அதிகமான கரோனா பாதிப்பாக ஆகஸ்ட் 30 அன்று 6,233 என்றிருந்தது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை நேற்று முதன்முறையாக உயர்ந்து 6,692 என ஏற்பட்டுள்ளது.

நான்காவது கட்டமான ஊரடங்கு தளர்விற்குப் பின் உ.பி.யில் கரோனா பரவல் அதிகமாகிவிட்டது. நேற்று ஒருநாள் மட்டும் இந்த பாதிப்பிற்கு தலைநகரான லக்னோவில் 1,006 பேர் உள்ளாகி விட்டனர். இதில், 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உ.பி.யில் தற்போது கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 59,963. உபி மாநில அமைச்சர்கள் 12 பேருக்கும் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஜி.எஸ்.தர்மேஷ், மோஷின் ராசா, சித்தார்த்நாத் சிங், சதீஷ் மஹானா, பூபேந்தர்சிங் சவுத்ரி, மோதிச்ங், சவுத்ரி உதய்பான்சிங், ஜெய் பிரதாப்சிங், பிரஜேஷ் பாதாக், தரம்சிங் செய்னி, மஹேந்திரசிங் மற்றும் உபேந்திர திவாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களன்றி, உ.பி.யின் இரண்டு எம்எல்ஏக்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கின் மகனும் நொய்டா தொகுதியின் பங்கஜ் சிங் மற்றும் ஆக்ரா ஊரகப்பகுதியின் ஹேமலதா திவாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் பங்கஜ் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உ.பி.யின் இரண்டு அமைச்சர்களான கமல்ராணி வருண், சேத்தன் சவுகான் ஆகியோர் கரோனா தொற்று ஏற்பட்டு ஏற்கெனவே பலியாயினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x