Published : 06 Sep 2020 07:16 AM
Last Updated : 06 Sep 2020 07:16 AM

நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு 10-ம் வகுப்பு பாடத்தில் இடம்பெறுகிறது

என்.டி.ராமாராவ்

ஹைதராபாத்

மறைந்த நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை பாடமாகிறது.

என்.டி.ராமாராவின் தீவிர ரசிகர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். அதனால்தான் இவரது மகனுக்கு ராமாராவ் என பெயரிட்டார். இவர் தற்போது தெலங்கானா அமைச்சராக உள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், இருந்த கால கட்டத்தில் காங்கிரஸின் கோட்டையாக விளங்கியது. அந்த சமயத்தில் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி, வெறும் 9 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்தார். “அண்ணன் எம்.ஜி.ஆரின் அறிவுரையால்தான் நான் முதல்வரானேன்” என என்.டி.ராமாராவ் அறிவித்தார்.

எம்.ஜி.ஆர் பாணியில் சத்துணவு திட்டத்தை, ஆந்திராவில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, பூரண மதுவிலக்கு, ரூ.2க்கு கிலோ அரிசி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை என்.டி. ராமாராவ் அறிமுகப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதுபோன்ற திட்டங்களில் கவர்ந்தவர்களில் ஒருவர் தற்போதைய முதல்வர் கே.சந்திரசேகர ராவ்.

சமீபத்தில், என்.டி.ராமாராவின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அனைவரும் அறிய வேண்டும் என்று கூறி, அவரது வாழ்க்கை வரலாறு 10-ம் வகுப்பு தெலுங்கு பாட திட்டத்தில் பங்கு பெறும் என அறிவித்தார். இதற்கு என்.டி.ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா சந்திரசேகர ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x