Published : 22 Sep 2015 10:30 AM
Last Updated : 22 Sep 2015 10:30 AM
ஆந்திராவில் பணம் கொடுக்கா ததால் ஆத்திரமடைந்த திருநங் கைகள், ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
மங்களூரு, சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கேட்ட பணம் கொடுக்க மறுத்த வர்களை அடித்ததாகவும் கூறப் படுகிறது.
அந்த வகையில் ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதற்கு அவர், கேட்ட பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பூர்ண சந்திர சஹுவை திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து காயப்படுத்தியதுடன் அவரை கீழே தள்ளிவிட்ட திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய போலீ ஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பூர்ணசந்திர சஹுவின் சடலத்தைக் கைப்பற்றினர்.
மேலும் காயமடைந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளை தேடி வருகின்றனர். ரயில்களில் திருநங்கைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பயணி களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT