Published : 05 Sep 2020 06:39 PM
Last Updated : 05 Sep 2020 06:39 PM
பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களை விரைந்து எதிர்கொண்டதற்காக ஆசிரியர்களை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டினார்
சிறப்பாகச் செயலாற்றும் உணர்வுக்குப் புத்தாக்கம் அளிக்க வேண்டுமென்றும், சராசரியாக செயலாற்றுவதை நாம் என்றும் அனுமதிக்கக் கூடாதென்றும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று கூறினார்.
ஆசிரியர்கள் தினத்தன்று தனது கருத்துகளை முகநூல் பதிவொன்றில் பகிர்ந்த அவர், உலகத்துகே ஆசிரியராக ஒரு காலத்தில் இந்தியா விளங்கியதாகவும், உலகக் கற்றலுக்கு பெருமளவில் பங்களித்ததாகவும் தெரிவித்தார்.
பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களை விரைந்து எதிர்கொண்டதற்காக ஆசிரியர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்பை நாம் போற்ற வேண்டும் என்று நாயுடு கூறினார்.
வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பதும், அனைத்தில் இருந்தும் சிறந்தவற்றை கிரகித்துக் கொள்வதும் இந்தியாவின் அணுகுமுறை என்று கூறிய அவர், பழங்காலத்தில் இருந்தே கற்பித்தலை மிகவும் புனிதமானத் தொழிலாக இந்தியா கருதி வருவதாகக் கூறினார்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான இன்று, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தினத்தை ஒட்டி, சொர்ண பாரத் அறக்கட்டளையால் நெல்லூரில் நடத்தப்பட்டுவரும் அக்ஷர வித்யாலயா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியனார். அப்போது தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தனக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு, வாழ்வில் தான் அடைந்தவற்றுக்கும், செய்த சாதனைகளுக்கும் கடன்பட்டிருப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு என்று கூறினார்.
நெல்லூர், விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சொர்ண பாரத் அறக்கட்டளையால் நடத்தப்பட்டுவரும் திறன் பயிற்சிகளின் ஆசிரியர்களுடனும் குடியரசுத் துணைத்தலைவர் காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாடினார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்திய நாயுடு, திறமைமிகு ஆசிரியர், தத்துவ ஞானி, அறிவுஜீவி, அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.
தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் கழித்ததாக கூறிய குடியரசுத் துணைத் தலைவர், தலைசிறந்த கல்விப் பணியை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT