Published : 05 Sep 2020 04:48 PM
Last Updated : 05 Sep 2020 04:48 PM
வட சிக்கிமில் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்களுக்கு இந்திய ராணுவம் உணவு, உடை மற்றும் ஆக்ஸிஜன் கொடுத்து உதவியுள்ளது.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 6 முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர் களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததை இந்திய, அமெரிக்க உளவுத் துறைகள் உறுதி செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்து, பின்னர் தணிந்தது.
கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் லடாக் பான்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சி செய்தனர். இந்த ஊடுருவலை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் காரணமாக இந்தியா, சீனா இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளது.
பதற்றத்தை தணிக்க கடந்த சில நாட்களாக இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் அருணாச்சலப் பிரதேசம் எல்லை கிராமம் ஒன்றில் 5 பேரை சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
சீன ராணுவம் பொதுவாக காடுகளில் வேட்டைக்குச் செல்லும் நபர்கள் பொதுவாகவே கணிக்க முடியாத எல்லையைக் கடந்து செல்லும் போது அவர்களைக் கொண்டு சென்று பிறகு விடுவிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக சீன மக்களை இந்திய ராணுவம் கடத்துகிறது என அந்நாடு புகார் தெரிவித்தது. அருணாச்சல பிரதேசத்தில் சபன்சிரி மாவட்டத்தில் வேட்டைக்குச் சென்ற 5 பேர் காணாமல் போய்விட்டதாக அவர்களது குடும்பத்தினர் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வட சிக்கிமில் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 3 சீனர்களுக்கு இந்திய ராணுவம் மீட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கிம் மாநலத்தில் வடக்குபகுதியில் செப்டம்பர் 3ஆம் தேதி 17,500 அடி உயரத்தில் உள்ள பிளட்டேயு என்ற பகுதியில் 3 சீனர்கள் வழிதவறி வந்துவிட்டனர்.
அவர்களை காப்பாற்றி விசாரித்த இந்திய ராணுவம் அவர்களுக்கு உணவு, கதகதப்பான உடை மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றைக் கொடுத்து சரியான இடத்திற்குச் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT