Published : 05 Sep 2020 04:46 PM
Last Updated : 05 Sep 2020 04:46 PM
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்து சென்றது. இந்நிலையில் கரோனா பரவல் கிராமப்புறங்களில் எப்படி என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
தொற்று மெதுவாகப் பரவும் காலக்கட்டத்தில் நகர்ப்புற மாவட்டங்களில் அதிகம் பரவியது. பிறகு கரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்த போது கிராமப்புறங்களுக்கும் பரவியது. இங்கு சுகாதார உள்கட்டமைப்பு மிகவும் பலவீனமானவை.
லாக் டவுனினால் பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஏப்ரல்-மேயில் லாக் டவுன் கொஞ்சம் தளர்த்தப்பட்ட பிறகு இவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பினர். அப்போது கொஞ்சம் கிராமங்களில் பரவல் வேகம் பிடித்தது.
இந்தியாவில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களுக்கு இடையில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அவ்வளவு சமச்சீரான முறையில் பரவலாக்கப்படவில்லை. உலகவங்கி தரவுகளின் படி இந்திய மக்கள் தொகையில் 65% கிராமவாசிகள்தான், ஆனால் அரசு மருத்துவமனைப் படுக்கைகள் 65% நகர்ப்புறங்களில்தான் உள்ளன.
2018-ன் படி, 85.9% கிராம மக்களுக்கு காப்பீடு வசதி கிடையாது. ஆனால் நகர்ப்புற மக்கள் தொகையில் 80.9% மக்கள் காப்பீடு வசதி கொண்டவர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களில் 20% ஊரகப்பகுதிகளில் சேவையாற்றி வருகின்றனர்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4 என்பதன் தரவுகளின் படி 25% கிராமப்புற மக்களுக்குத்தான் பொது புறநோயாளிப்பிரிவு மருத்துவ வசதி உள்ளது. நிச்சயமாக கிராம-நகர வேறுபாடு இன்னமும் மறையவில்லை. கிராமப்புறங்களிலும் கரோனா பரவல் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் முதல் 10 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்ட போது 32% பாதிப்பு நகர்ப்புற மாவட்டங்களில் இருந்தது. பெரும்பாலும் நகர்ப்புற மாவட்டங்களில் 28% ஆகவும் மாவட்ட கிராமப்புறங்களில் 40 % ஆக இருந்தது.
இந்தியாவில் 10 லட்சம் முதல் 20 லட்சமாக கரோனா பரவல் அதிகரித்த போது மாவட்ட நகர்ப்புறங்களில் 38% ஆகவும் கிராமப்புறங்களில் 67% ஆகவும் அதிகரித்தது.
கோவிட்-19 கேஸ்கள் 20 லட்சம் முதல் 33 லட்சமாக அதிகரித்த போது நகரப்பகுதிகளில் 33% ஆகவும் கிராமப்புறங்களில் 67% ஆகவும் இருந்தது.
கிராமப்புறங்களில் அதிகம் பரவிய மாநிலங்களில் ஜார்கண்டில் 56% என்றும் பிஹாரில் 82% என்றும் சத்திஸ்கரில் 50% என்றும் ஒடிசாவில் 44% என்றும் முதலில் கரோனா பரவல் நிலவரம் இருந்தது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20-33 லட்சமாக அதிகரித்த காலக்கட்டத்தில் உ.பி கிராமப்புறங்களில் பாதிப்பு விகிதம் 46% ஆகவும் அஸாமில் 70% ஆகவும் பிஹாரில் 83% ஆகவும் ஒடிசாவில் 56% ஆகவும் உள்ளது.
- மூலம்: தி இந்து ஆங்கிலம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT