Last Updated : 05 Sep, 2020 04:11 PM

 

Published : 05 Sep 2020 04:11 PM
Last Updated : 05 Sep 2020 04:11 PM

தேசியக் கல்விக் கொள்கை ஒரு புரட்சிகரச் சீர்த்திருத்தம்: பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

மும்பை

என்.இ.பி. என்று அழைக்கப்படும் புதியக் கல்விக் கொள்கை 2020 என்பது ஒரு புரட்சிகர சீர்த்திருத்தம் என்ரு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்தியாவில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும் தற்போதுள்ள 25% என்பதிலிருந்து அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் பார்லே திலக் வித்யாலயா அசோசியேஷனின் ஆசியர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மெய்நிகர் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: “புதியக் கல்விக் கொள்கை இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும், இவர்கள் 21ம் நூற்றாண்டில் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்வார்கள்.

இந்தக் கல்விக் கொள்கை மூலம் கற்பித்தல், கற்றல் அனுபவங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

நாடு முழுதும் மாணவர்கள் சமூக அந்தஸ்து, பொருளாதார வெற்றி என்ற லட்சியத்தை நோக்கி நடைபோடுவார்கள், மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கள்வி அளிக்க பொருளாதார முன்னேற்றமும் கைகொடுக்கும்.

உயர் கல்வி நிலையங்கள் கிராமப்புறங்கள் வரை பரவி பரவலான உயர்கல்விக்கான தேவையை அதிகரிப்பது இந்தியாவில் மாணவர் சேர்க்கை விகிதங்களில் முக்கிய பங்காற்றுகிறது.

புதியக் கல்விக் கொள்கை அடிப்படை கல்வி மற்றும் எண் கல்வியறிவுக்கு அழுத்தம் அளிக்கிறது, மேலும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைவருக்கும் கல்வி என்பதை வழங்கும்.

குழந்தைப்பருவ கல்வி, விசாரம் சார்ந்த கல்வி, ஆசிரியப் பயிற்சி, அடிப்படை மற்றும் கணித அறிவு ஆகியவற்றுக்கு புதியக் கல்விக் கொள்கை அழுத்தம் அளிக்கிறது.

3-8 வயதுடைய குழந்தைகளுக்கு அறிதிறன் வளர்ச்சி முக்கியம், கொடுக்கப்பட்ட பாடங்களைப் புரிந்து படித்தல் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது மனப்பாடம், ஒப்பித்தல் அல்ல.

இளம் பருவத்திலேயே செயல் அடிப்படையிலான கற்றல் புதியக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சம், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விரிவான, விளக்கமான, களத்தொடர்புடைய புதிய அறிவுகள் மாணவர்களிடையே விஞ்ஞானபூர்வ ஆர்வத்தை வளர்க்கும்.

உலக அளவில் சவாலான குடிமக்களை உருவாக்க வேண்டுமெனில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் என்பது நம் கல்வியில் முக்கியத்துவம் பெற வேண்டும். ” இவ்வாறு புதிய கல்விக் கொள்கை பற்றி அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x