Published : 05 Sep 2020 09:30 AM
Last Updated : 05 Sep 2020 09:30 AM
கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 சோதனை உத்திகளுக்கான புதிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக நமக்குத் தேவைப்பட்டால் நாம் கரோனா டெஸ்ட் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கரோனா டெஸ்ட் தேவை என்றால் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு வழிவகை செய்துள்ளது.
ஆகவே வெளிநாடுகளுக்கு பயணிப்போர் அல்லது இந்தியாவுக்குள்ளேயே மாநிலங்களுக்கு இடையே பயணிப்போர் தேவைப்பட்டால் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.
“இந்தியாவில் கோவிட்-19 டெஸ்ட்டிங் உத்தி அறிவிக்கை-6-ஐ ஐசிஎம்ஆர் வெளியிட்டது. மாநில அரசுகள் கோரிக்கைக்கு கரோனா சோதனை என்பதன் வழிமுறைகளை எளிமைப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விரைவுகதி ஆண்டிஜென் டெஸ்ட் ஆன நோய் எதிர்ப்பான் சோதனைகளை அனைவருக்கும் செய்ய வேண்டும். குறிப்பாக கரோனா தொற்று பரவலாக இருக்கும் நகரங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் ஆண்ட்டிஜென் டெஸ்ட் செய்யப்படுவது அவசியம் என்று ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் அறிவுறுத்தியுள்ளது.
அதே போல் சோதனை செய்யப்படவில்லை என்பதற்காக பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சையை தாமதிக்கவோ மறுக்கவோ கூடாது. கரோனா சோதனை வசதி இல்லை என்பதற்காக அவர்களுக்கான சிகிச்சையை மறுப்பதோ தாமதப்படுத்துவதோ கூடாது.
மற்றபடி கட்டுப்பாட்டு பகுதிகளில் தனசரி கண்காணிப்பு, நுழைவாயிலில் காய்ச்சல் உள்ளிட்ட சோதனை, கோரிக்கைக்கு ஏற்ப கரோனா டெஸ்ட்டிங், ஆர்டி பிசிஆர், ட்ரூநாட், சிபிநாட் மற்றும் ஆண்டிஜென் டெஸ்ட்கள் அதன் தேவையின் முன்னுரிமை கருதி எடுக்கப்பட வேண்டும் போன்ற ஏற்கெனவே உள்ள ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் நோய் குறிகுணங்கள் இல்லாத நோய் தாக்கும் தன்மையுடைய 65 வயதுக்கும் மேற்பட்டோர், இணை நோய்கள் உள்ளோர் ஆகியோருக்கு கரோனா டெஸ்ட் எடுப்பது அவசியம்.
அதே போல் முன்னிலைக் களப்பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிகுறி இருந்தால் டெஸ்ட் செய்யப்பட வேண்டும். அதே போல் நோய்க்குறி இல்லாத நேரடி மற்ரும் நோய் சாத்தியம் அதிகம் உள்ள தொடர்புகள் அதாவது குடும்பம், பணியிடம் மற்றும் 65 வயது, அதற்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதவர்கள் இணை நோய்கள் உள்ளவர்கள் சோதனையில் கரோனா உறுதி செய்யபப்ட்டவர்களாக இருந்தால் இவர்களுக்கு 5ம் நாள் மற்றும் 10ம் நாளில் மீண்டும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
சோதனையில் முதலில் அதிவிரைவு ஆண்டிஜென் டெஸ்ட் முதலில் செய்ய வேண்டும், இதனைத் தொடர்ந்து ஆர்டி-பிசிஆர் அல்லது ட்ரூநாட் அல்லது சிபிநாட், இரண்டாவது தெரிவாக மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் 10% ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எடுப்பது அவசியமாகும்.
நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இல்லாதவர்களுக்கு நோய்க்குறிகுணம் இல்லாதவர்களுக்கும் அதாவது குடும்பம், பணியிடத் தொடர்புடையவர்கள், 65 வயது அதற்கு மேர்பட்டவர்கள், சர்க்கரை, கிட்னி உள்ளிட்ட பிற நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எடுப்பது அவசியம்..
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு திரும்பி 14 நாட்கள் ஆனவர்கள், கரோனா சாம்பிள் சோதனையில் உறுதி செய்யப்பட்ட நோய்க்குறி உள்ள தொடர்ப்புடையவர்கள் உள்ளிட்டோருக்கு ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் உள்ளிட்டவை அவசியம்.
மருத்துவமனை அமைப்பில் தீவிர உடனடி மூச்சுக்குழல் தொற்று (SARI) உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை அறிவுறுத்தப்படுகிறது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள், பிற நீண்ட கால நோயுடையவர்கள், 65 வயது மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கும் சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
அதே போல் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், லேப்ராஸ்கோப் உள்ளிட்ட சதை ஊடுருவல் இல்லாத அறுவைசிகிச்சை மேற்கொண்ட கரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் டெஸ்ட் செய்வது அறிவுறுத்தப்படுகிறது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருத்தரித்த பெண்களுக்கும் சோதனை அவசியம்.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட தாய்மார்கள் முகக்கவசம் அணிவதோடு குழந்தையைக் கையாளும்போது அடிக்கடி கைகளை கழுவதல் மேற்கொள்ள வேண்டும். அதே போல் தாய்ப்பால் கொடுக்கப்படும் முன் மார்பகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பல அறிவுறுத்தல்களை ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT