Last Updated : 03 Sep, 2020 06:55 AM

 

Published : 03 Sep 2020 06:55 AM
Last Updated : 03 Sep 2020 06:55 AM

உ.பி.யில் 12 அமைச்சர்களுக்கு கரோனா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகனுக்கும் தொற்று

புதுடெல்லி

உத்தர பிரதேசத்தில் 12 அமைச்சர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

நாட்டிலேயே அதிக அளவாக உத்தர பிரதேசத்தில் 57.76 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள் ளது. அங்கு கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் சதவீதம் 4.6 ஆக உள்ளது. இதுவரை 3,542 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 55,538 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நான்காவது கட்ட ஊரடங்கு தளர் வுக்கு பிறகு உ.பி.யில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 5,571 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள் ளனர். இவர்களில் மாநில அமைச்சர்களான ஜி.எஸ்.தர்மேஷ், மோஷின் ராசா, சித்தார்த்நாத் சிங், சதீஷ் மஹானா, பூபேந்தர் சிங் சவுத்ரி, மோதி சிங் சவுத்ரி, உதய்பான் சிங், ஜெய் பிரதாப் சிங், பிரஜேஷ் பாதாக், தரம் சிங் செய்னி, மஹேந்திர சிங் மற்றும் உபேந்திர திவாரி ஆகியோரும் அடங்குவர்.

மேலும் நொய்டா தொகுதி எம்எல்ஏ பங்கஜ் சிங், ஆக்ரா ஊரகப்பகுதி எம்எல்ஏ ஹேமலதா திவாகர் ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பங்கஜ் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சர் ராஜ்நாத் சிங்கின் மகன் ஆவார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உ.பி.யில் ஏற்கெனவே மாநில அமைச் சர்கள் கமல் ராணி வருண், சேத்தன் சவு கான் ஆகிய இருவரும் கரோனா தொற் றால் உயிரிழந்தனர். நாட்டிலேயே உ.பி.யில் தான் அதிக அளவிலான அரசியல்வாதி களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x