Published : 02 Sep 2020 08:15 AM
Last Updated : 02 Sep 2020 08:15 AM
புதிய ஒருங்கிணைந்த சங்கிலித் திட்டங்கள் மூலம் 16,200 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.
2,57,904 விவசாயிகளுக்கு இந்தத் திட்டங்கள் பயனளிக்கும் என்று கூறிய அவர், அமைச்சகங்களுக்கிடையேயான ஒப்புதல் குழு கூட்டங்களில் 27 திட்டங்களுக்கு பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் 7 திட்டங்களுக்கும், பிஹாரில் ஒரு திட்டத்துக்கும், குஜராத்தில் 2 திட்டங்களுக்கும், ஹரியாணாவில் 4 திட்டங்களுக்கும், கேரளாவில் ஒரு திட்டத்துக்கும், மத்தியப் பிரதேசத்தில் ஒரு திட்டத்துக்கும், பஞ்சாபில் ஒரு திட்டத்துக்கும், ராஜஸ்தானில் 2 திட்டங்களுக்கும், தமிழ்நாட்டில் 4 திட்டங்களுக்கும் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் 1 திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த 27 ஒருங்கிணைந்த சங்கிலி திட்டங்கள் ரூ 743 கோடி மொத்த முதலீட்டை ஈர்த்து, நவீன, புதுமையான உள்கட்டமைப்பை நாடு முழுவதும் உருவாக்கும். ரூ 208 கோடி நிதியுதவி பெறும் இந்தத் திட்டங்கள் இந்தியாவின் உணவு சங்கிலியின் திறனையும், உறுதியையும் அதிகரிக்க உதவும்.
அழுகக்கூடிய பொருள்களைப் பாதுகாக்க போதுமான கிடங்கு போன்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல், பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் இந்தியாவை தற்சார்பாக்கவும் உதவும் என்று அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT