Published : 02 Sep 2020 08:02 AM
Last Updated : 02 Sep 2020 08:02 AM

பிரதமர் மோடி மீது அவதூறு; பேஸ்புக் துணை போகிறது: பாஜக எதிர்க் குற்றச்சாட்டு

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளை நீக்காமல் பேஸ்புக் இந்தியா ஆளும் கட்சிக்குத் துணை போகிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எதிர்க்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அதாவது “பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது பேஸ்புக்கில் வெளியாகும் அவதூறுகளுக்கு, அந்நிறுவன மூத்த அதிகாரிகள் துணை போகின்றனர் என்று ரவிசங்கர் பிரசாத் எதிர்க்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மார்க் ஸூக்கர்பர்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் பணிபுரியும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே துணை போகின்றனர். பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் மூத்த அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு ஆதாரங்கள் உள்ளன். கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன் பல பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான புகார்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதே சமயம் உண்மைக்கு மாறான குறிப்பிட்ட செய்திகள் மட்டும் வெளியே கசியவிடப்படுகின்றன, இந்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து புரளிகள் கிளப்புவது கண்டனத்துக்குரியது.

சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விஷமிகள் மூலம் பேஸ்புக் வாயிலாக சிலர் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

இந்திய அரசை ஸ்திரமற்றதாக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். எனவே இத்தகையச் செயல்களை கட்டுப்படுத்தி இந்திய சமூகம் மற்றும் பல்வேறு மதங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் நாடு சார்ந்த விதிமுறைகளை பேஸ்புக் நிர்வாகம் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும், என்று தன் கடிதத்தில் கூறியுள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x