Published : 02 Sep 2020 07:39 AM
Last Updated : 02 Sep 2020 07:39 AM
ஆகஸ்ட் 29 மற்றும் 30ம் தேதிகளில் சீன ராணுவம் ஆக்ரோஷமான நகர்வை பேங்காங் ஸோ ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் மேற்கொண்டதை கண்காணிப்பு கேமரா படம்பிடித்துக் காட்டியதாக இந்திய அதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
எல்லையில் அந்த இடத்தில் சக்தி வாய்ந்த கண்காணிப்பு கேமரா இருப்பதால் சீன ராணுவத்தின் நடமாட்டம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சீன ராணுவத் திட்டம் முறியடிப்பு:
திங்களன்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவிக்கும் போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் பேங்காங் ஸோ தென்கரைபகுதி அத்துமீறல் முயற்சியை முன் தவிர்த்துள்ளோம். சீனாவின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று கூறியிருந்தது.
ஏப்ரல்-மே-யிலிருந்து லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கண்ட்ரோல் எல்லைக்கோடு பகுதியில் படைகளைக் குவித்த போது பேங்காங் ஸோ ஏரிப்பகுதியில் எந்த ஒரு தகராறும் இருந்ததாக தெரியவில்லை என்று கூறும் அதிகாரி, “அப்பகுதியில் சீன ராணுவத்தினர் நடமாட்டம் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதைத் தடுத்து விட்டோம். சீனாவும் அவர்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளனர்” என்றார் அந்த அதிகாரி.
உளவுத்துறை சமீபத்தில் கூறிய கணிப்புகளின் படி ஜூன் 15ம் தேதி சண்டை நிகழ்ந்த கல்வான் சந்திப்புப் பகுதியில் இந்தியப் பார்வைக்கு உட்பட்ட எல்லைக் கோட்டுப்பகுதிக்குள் 800மீ உள்ளே வந்துள்ளனர் சீன ராணுவத்தினர். ஆனால் அதன் பிறகு ஜூலை 5ம் தேதி நடந்த சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்புப் பேச்சுவார்த்தைகள் உட்பட தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சீனா பின் வாங்கியது.
கல்வான் பள்ளத்தாக்கிலும் கோக்ராவிலும் சீன துருப்புகள் முறையே 2கிமீ 1 கிமீ உள்ளே வந்துள்ளன. பாங்காங் ஸோ ஏரியின் வடக்குக் கரையின் ஃபிங்கர் பகுதியில் சீன ராணுவ 8 கிமீ உள்ளே வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT