Published : 01 Sep 2020 09:37 AM
Last Updated : 01 Sep 2020 09:37 AM
வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் இணைய வேண்டியது அவசியம். சிறுபான்மையினரை மையநீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்கு அரும்பெரும் முயற்சிகள் தேவை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
இந்தியாவில் பல சாதிகள், பல மொழிகல், பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம் என்றார் அசோக் கெலாட்.
மாநிலத்தின் பல்வேறு மாவாட்டங்களில் சிறுமான்மை விவகார மற்றும் வக்பு துறைக்கான 8 கட்டிடங்களை அசோக் கெலாட் திறந்து வைத்தார்.
இந்தக் கட்டுமானங்கள் சிறுபான்மையின சமூகத்தினருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை நீட்டிக்க இந்த கட்டுமானங்கள் ஒரு மைல்கல் என்றார் அவர்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இந்த உள்கட்டமைப்பு வசதிகள் அவருகளுக்கு பயனளிக்கும். மொத்தமாக இந்த கட்டுமானங்களின் செலவு ரூ.18.75 கோடியாகும்.
சில இடங்களில் சிறுபான்மையின சமூகத்துக்கு கல்வி வசதி இல்லை சுகாதார வசதிகள் இல்லை. சில பகுதிகளில் சிறுபான்மையினத்தவருக்கு கல்வி இல்லை. எனவே மாநில அரசு இதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமெனில் அதற்கு கல்விதான் முக்கியம், என்றார் அசோக் கெலாட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT