Published : 30 Aug 2020 08:19 AM
Last Updated : 30 Aug 2020 08:19 AM

உட்கட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது: மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சனம்

புதுடெல்லி

உட்கட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது. எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.

"காங்கிரஸுக்கு முழுநேர, துடிப்பான தலைமை தேவை. கட்சியின் தலைமையில் இருந்து அடிமட்டம் வரை மாற்றம் தேவை. உட்கட்சி தேர்தல் மூலம் நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும்" என்று கட்சியின் மூத்த தலைவர்கள் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் அனுப்பினர்.

பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட 5 முன்னாள் முதல்வர்கள், குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உட்பட4 முன்னாள் மத்திய அமைச்சர்கள்என 23 மூத்த தலைவர்கள் அந்தகடிதத்தில் கையெழுத்திட்டிருந்த னர். சுமார் 200-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகக் கூறப் படுகிறது.

இதன்பின் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், 23 மூத்த தலைவர்களின் கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கடிதம் எழுதிய தலைவர்களை, ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று முடிவு செய்யப் பட்டதால் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தி காங்கிரஸுக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்போது 51 சதவீதம்பேராவது உங்கள் பின்னால் இருப்பார்கள். நியமன தலைவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இருக்காது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களை தேர்தல் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை எளிதில் நீக்க முடியாது. உட்கட்சி தேர்தலில் 2-வது, 3-வது, 4-வது இடம்பிடிப்போர் கட்சியை வலுப்படுத்த உழைக்க வேண்டும். தேர்தல் மூலம் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளை தேர்வு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?

இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுகின்றனர். இது கட்சியைபலவீனப்படுத்தும் நடவடிக்கை யாகும். உட்கட்சி தேர்தல் நடத்தினால் மட்டுமே காங்கிரஸை வலுப்படுத்த முடியும். உட்கட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாது. எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது, "கடந்த2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் காரிய கமிட்டி கூட்டத்தில், கடிதம்எழுதிய கட்சியின் மூத்த தலைவர்கள் மீது கூறப்பட்ட விமர்சனங்கள் அநாகரிகமாக உள்ளன" என்றார்.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஜிதின்பிரசாத்தும் ஒருவர். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தர பிரதேச காங்கிரஸில் ஒரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கும் கபில் சிபல் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸின் இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சி யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x