Last Updated : 28 Aug, 2020 08:12 AM

 

Published : 28 Aug 2020 08:12 AM
Last Updated : 28 Aug 2020 08:12 AM

உ.பி.யில் அமர் சிங் மறைவால் காலியான மாநிலங்களவை பதவிக்கு பாஜக சார்பில் முஸ்லிம் தேர்வு?

புதுடெல்லி

உத்தரபிரதேசம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அமர் சிங் (சமாஜ்வாதி) சமீபத்தில் காலமானார். இதற்கான இடைத் தேர்தலில் பாஜகசார்பில் ஒரு முஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அந்த வகையில் பாஜகவின் ஊடகப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற டாக்டர் சையது ஜபர் இஸ்லாம் நிறுத்தப்பட உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் ஜெர்மனியின் டச் வங்கியின் இயக்குநராகப் பணியாற்றியவர். பிறகுமகாராஷ்டிர பாஜகவில் கடந்த7 வருடங்களாக முக்கியப் பங்காற்றி வந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கப்பட்ட நரேந்திர மோடியின் பிரச்சாரக் குழுவிலும் ஜபர் இஸ்லாம் இடம் பெற்றிருந்தார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர் இந்த ஜபர் இஸ்லாம். சிந்தியாவை பாஜகவுக்கு இழுத்ததில்ஜபர் இஸ்லாம் முக்கியப் பங்காற்றியதாகவும் கருதப்படுகிறது. இவரால்தான் மத்திய பிரதேசத்தில் பாஜக முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் அமர்ந்தார். இதைப் பாராட்டும் வகையில் உத்தரபிரதேச பாஜக சார்பில் மாநிலங்களவையின் இடைக்கால உறுப்பினராக உள்ளார் ஜபர் இஸ்லாம்.

இது பிஹார், உத்தரபிரதேசம் என அடுத்து பல்வேறு மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களை கவரும் பாஜகவின் முயற்சியாக பார்க்கப்படு கிறது.

பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 5-வது முஸ்லிம் எம்.பி.யாகஜபர் இஸ்லாம் இருப்பார். இவருக்கு முன்பாக ஆரிப் பேக், சிக்கந்தர் பக்த், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஷானவாஸ் உசைன் ஆகியோர் எம்.பி.க்களாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x