Published : 27 Aug 2020 04:36 PM
Last Updated : 27 Aug 2020 04:36 PM

காஷ்மீரிகளைக் கைது செய்ததற்கு எதிராக போராட்ட முயற்சி: பிடிபி கட்சித் தலைவர்கள் கைது 

ஸ்ரீநகர் பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர்.

ஸ்ரீநகர்

அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட காஷ்மீரிகளை கைது செய்ததை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற பிடிபி கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஷெர்-எ-காஷ்மீர் பார்க் அருகே பிடிபி தலைவர்கள் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். அங்கிருந்து ஊர்வலம் போக அவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள் சிறையில் அடைக்கபட்ட காஷ்மீரிகள் அதாவது காஷ்மீருக்குள்ளும் காஷ்மீருக்கு வெளியேயும் சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீரிகள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர். முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியையும் விடுவிக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.
நகரின் மையம் நோக்கி ஆர்ப்பாட்டாக்காரர்கள் பேரணி நடத்த முயற்சி செய்தனர், ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

இது தொடர்பாக பிடிபி கட்சி கூறும்போது, அமைதிப் போராட்டத்தை போலீஸார் தடுக்கின்றனர், இளைஞர்களை துன்புறுத்துகின்றனர், ஊடகங்களை செயல்படுவதில்லை, இன்னும் பல மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக கட்சி தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “அமைதிப் போராட்டத்துக்கு எதிராக போலீஸார் தடுப்பணை போடுகின்றனர். இளைஞர்களை துன்புறுத்துகின்றனர், உரிமைகள் பல மீறப்படுகின்றன, ஊடகங்கள் பணியை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை” என்று குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

முஃப்தியின் மகள் இல்திஜா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘வலுக்கட்டாய இயல்பு நிலையை நிறுவனமயமாக்கப்பட்ட அடக்குமுறையில் சாதிக்கின்றனர்’ என்று சாடியுள்ளார். மேலும் அமைதிப்போராட்டமும் தேசத் துரோகமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x