Published : 26 Aug 2020 08:04 PM
Last Updated : 26 Aug 2020 08:04 PM
காம்ப்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (சி ஜி ஏ) அமைப்பின் பி எஃப் எம் எஸ் செயலி மூலம் பிறப்பிக்கப்படும் ஓய்வூதிய வழங்கு ஆணைகளை டிஜி லாக்கருடன் இணைக்க ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலனுக்கான துறை முடிவு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிலாக்கர் கணக்கிலிருந்து தங்களது சமீபத்திய ஓய்வூதிய ஆணையை எப்போது வேண்டுமானாலும் பிரதி எடுத்துக் கொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் தங்களது டிஜிலாக்கரில் தங்களது ஓய்வூதிய வழங்கு ஆணைகளை நிரந்தரமாக ஆவணப்படுத்திக் கொள்ள இது வகை செய்யும். 2021-22 ஆம் ஆண்டுக்குள் சிவில் அமைச்சகங்கள் இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெருந்தொற்று காரணமாக இந்தப்பணியை இத்துறை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டது.
இந்த வசதி பவிஷ்யா மென்பொருள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் ஓய்வூதியதாரர்களுக்கான ஒற்றைச்சாளரத் தளமாக இயங்கும். ஓய்வூதியம் நடைமுறைப்படுத்துவது முதல் அதன் இறுதிக் கட்டம் வரை அனைத்துப் பணிகளையும் இந்தத் தளம் மேற்கொள்ளும். பவிஷ்யா மென்பொருள், ஓய்வு பெறவுள்ள ஊழியர்களுக்கு உதவும் வகையில் அவர்களது டிஜிலாக்கர் கணக்கை, அவர்களது பவிஷ்யா கணக்குடன் இணைக்க உதவும். அவர்களது மின் பி பி ஓ விவரங்களை எளிதில் பெறவும் இது உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT