Published : 26 Aug 2020 05:53 PM
Last Updated : 26 Aug 2020 05:53 PM
ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்ஜித், பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டைப் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, அடுத்த 4-5 தினங்களில் மேற்கு – வடமேற்காக நகர்கிறது. .
இதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கைக் கரையோரப் பகுதி, ஜார்க்கண்ட் ஆகியவற்றில் வரும் 28-ம் தேதி வரை கனமழை பரவலாகப் பெய்யக் கூடும். சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானில் இம்மாதம் 28ம் தேதி வரையிலும் கனமழை பெய்யலாம்.
#WATCH Jammu and Kashmir: A portion of a bridge in Jammu's Gadigarh area collapses, following heavy rainfall in the region. pic.twitter.com/MPwTGefF8D
— ANI (@ANI) August 26, 2020
ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்ஜித், பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் , இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகள், உத்தரகண்ட், மேற்கு ராஜஸ்தான் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் சில இடங்களிலும், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT