Published : 25 Aug 2020 04:04 PM
Last Updated : 25 Aug 2020 04:04 PM

இந்தியாவில் கரோனா பரிசோதனை; 3.7 கோடி எண்ணிக்கையை கடந்தது

புதுடெல்லி

இந்தியா சுமார் 3.7 கோடி மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. பத்து லட்சத்துக்கு 26,685 சோதனைகள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இந்தியா, “பரிசோதித்தல், தடம் அறிதல், சிகிச்சை அளித்தல்” என்ற உத்தியில் கவனம் செலுத்தி, இதுவரை சுமார் 3.7 கோடி கொவிட்-19 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. அன்றாட சோதனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதால், இதுவரை மொத்தம் 3,68,27,520 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 9,25,383 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பத்து லட்சத்துக்கு 26,685 என்ற விகிதத்தில் சோதனைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.

பரிசோதனை ஆய்வுக் கூடங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது, பரிசோதனை உத்திகளில் முக்கிய அம்சமாக உள்ளது. தற்போது, நாட்டில் மொத்தம் 1,524 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. 986 ஆய்வுக்கூடங்கள் அரசுப் பிரிவிலும், 538 தனியார் ஆய்வுக் கூடங்களும் உள்ளன. விவரங்கள் பின்வருமாறு

· ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 787 (அரசு 459 தனியார் 328 )

· ட்ரு நெட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 619 (அரசு 493 தனியார் 126)

· சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 118 (அரசு 34 தனியார் 84)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x