Published : 23 Aug 2020 08:32 AM
Last Updated : 23 Aug 2020 08:32 AM
இந்தியாவின் முன்னாள் கிரிக்க்டெ வீரரும், உ.பி. அமைச்சராக இருந்தவருமான சேத்தன் சவுகான் குருகிராம் மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸுக்கு சிகிச்சைப் பலனின்றி பலியானார், ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் அரசு மருத்துவமனையின் மோசமான சிகிச்சை மற்றும் அலட்சியமே என்று சமாஜ்வாத்ஹிக் கட்சித் தலைவர் சுனில் சிங் சாஜன் பரபரப்புக் குற்றம்சாட்டியுள்ளார்.
73 வயதான சவுகான் சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் சயன்ஸஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கோவிட்19 உறுதியானதால் மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்ரப்பட்டார், அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது. 36 மணி நேரம் உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்த சேத்தன் சவுகான் உயிர் கடைசியில் பிரிந்தது.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மேலவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய சமாஜ்வாதி எம்.எல்.சி சுனில் சிங் சாஜன், சவுகான் இறப்புக்குக் காரணம் கரோனா அல்ல, மோசமான சிகிச்சையும் கவனிப்பின்மை அலட்சியமும்தான் என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
தானும் சவுகானும் ஒரே வார்டில் தான் அனுமதிக்கப்பட்டோம் என்று கூறிய சுனில் சிங், “மருத்துவரும் நர்ஸ் ஒருவரும் ரவுண்ட்ஸ் வரும்போது யார் சேத்தன் என்று கேட்டனர், அதற்கு அவர் கையை உயர்த்தினார், சவுகான் ஒரு எளிமையான மனிதர். எப்போது கரோனா நோய் தொற்று உறுதியானது என்றனர், அதற்கு சவுகான் முழு விளக்கமளித்தார். அப்போது இன்னொரு மருத்துவ ஊழியர் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார், அதற்குச் சவுகான், ‘யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறேன்’ என்றார்.
எனக்கு கோபம் பயங்கரமாக வந்தது, என்ன இது? இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடியிருக்கிறார் என்றேன், உடனே மருத்துவர், ஓ! அந்த சேத்தனா என்று கேட்டு விட்டு டாக்டரும் மற்ற ஊழியரும் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்” என்றார்.
சுனில் சிங் சாஜனின் இந்தப் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியில் மேற்கொண்ட ட்வீட்டில், “கரோனா தடுப்பில் அமெரிக்காவுடனெல்லாம் ஒப்பிட்டு பேசப்பட்டது, ஆனால் தன் அமைச்சரவை சகாவுக்கே இப்படி மருத்துவமனையில் நடந்ததை யோகி மறந்து விட்டார். அரசு மருத்துவமனையில் சேத்தன் சவுகானுக்கு நேர்ந்ததை யோகி மறந்து போய் விட்டார்” என்றார்.
இதனையடுத்து எஸ்.ஜி.ப்.ஜி.ஐ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர்.கே.திமான் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT