Published : 21 Aug 2020 05:40 PM
Last Updated : 21 Aug 2020 05:40 PM

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

கோப்புப் படம்

கொச்சி

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த ஜூன் 5-ம் தேதி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சரித் குமார் அளித்த தகவலின்படி, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸவப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர்.

இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.

இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

தங்கக் கடத்தில் வழக்கு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் சுங்கத்துறையினரும், என்ஐஏ அமைப்பினரும் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்தவழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே முக்கியக் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகிய மூவரையும் அமலாக்கப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனு மீது எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்தது கருப்பு பணம் என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. ஸ்வப்னாவின் ஜாமீன் மனு கொச்சி நீதிமன்றங்களில் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க கேரள அரசு முயலுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்ட வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் ‘‘கேரள சட்டப்பேரவையில் வரும் திங்களன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x