Published : 20 Aug 2020 05:44 PM
Last Updated : 20 Aug 2020 05:44 PM

இந்தியாவில் ஒரே நாளில் 9 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை

புதுடெல்லி

இந்தியா ஒரே நாளில் 9 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையை, இந்தியா தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

முதல் முறையாக, ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,18,470 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்ட உள்ளது.

இந்த சாதனையால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை மொத்தம் 3.25 கோடிக்கும் அதிகமாகும் (3,26,61,252)

கொவிட்-19 பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், பத்து லட்சம் பேருக்கான பரிசோதனை விகிதம் 23,668 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்படும் அரசு ஆய்வகங்கள் 977, தனியார் ஆய்வகங்கள் 517 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1494 ஆகும். இதன் விவரங்கள்:

· ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 764 (அரசு: 453 + தனியார்: 311)

· ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 611 (அரசு: 490 + தனியார்: 121)

· சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 119 (அரசு: 34 + தனியார்: 85)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x