Published : 20 Aug 2020 04:39 PM
Last Updated : 20 Aug 2020 04:39 PM
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அமைச்சரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் சில மாநிலங்களில் தீவிரத்தன்மை குறையவில்லை. இதனால் கரோனா பாதிப்பு 28 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனாவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகள் என யாரும் தப்பவில்லை.
பாஜக தரப்பில் ஏற்கெனவே மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். இதில் அமித்ஷா கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இவர் தவிர உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், , மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, அர்ஜுன் ராம் மேக்வால், ஸ்ரீபாட் நாயக், கைலாஷ் சவுத்ரி,தர்மேந்திர பிரதான், ஆகியோரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய ஜல் சக்தி துரை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கஜேந்திர சிங் ஷெகாவத் அவரின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எனக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால், நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடைய நெருங்கிய தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், நண்பர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், இரு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார். சட்லஜ் யமுனா இணைப்புக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் காணொலி மூலமும், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் நேரடியாகயும் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT