Published : 19 Aug 2020 12:39 PM
Last Updated : 19 Aug 2020 12:39 PM
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக்கோரி தொடரப்பட்டவழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு இறுதிதான், ஆனால், பிஎம் கேjdஸ் மீதான விவாதங்கள் கல்விவட்டாரங்கள், அறிவார்ந்தவர்கள் மத்தியில் ,கேள்விகள் தொடர்ந்து எழும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிஎம்கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து நேற்று தீர்ப்பளித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பல்ேவறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:
பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்ேவறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும்.
ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நிர்வாகச்செயல்பாடுகள் ஆகியவை குறித்து நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் நன்கொடை அளித்துள்ளார்கள்? 2020,மார்ச் மாதத்துக்குள் ரூ.3,076 கோடி நிதி யார் கொடுத்தது?. சீன நிறுவனங்களை அதில் இணைத்துள்ளீர்களா? ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து எவ்வளவு பணம் பெற்றுள்ளீர்கள்? யாரெல்லாம் நன்கொடை அளித்துள்ளர்கள்?
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பிஎம் கேர்ஸ் நிதியை தொடக்கத்திலிருந்து யாரெல்லாம் பெற்றுள்ளார்கள்? பணம் பெற்றவர்களிடம் இருந்து அந்த பணம் முறையாக பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பயன்பாட்டுச் சான்று பெறப்பட்டுள்ளதா? ஆர்டிஐ விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இந்த நிதி இருந்தால், இந்த வலிமையான கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பது?
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT