Published : 19 Aug 2020 09:48 AM
Last Updated : 19 Aug 2020 09:48 AM

பி.எம். கேர்ஸ் நிதிக்கு   38 பொதுத்துறை நிறுவனங்கள் நன்கொடை

முப்பத்தெட்டு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பு நிதிகளிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு 2,000 கோடிக்கும் மேல் நிதியளித்திருப்பதாக ஆங்கில ஊடகம் தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களில் தெரியவந்துள்ளது.

கோவிட்-19 நிவாரணத்துக்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில் மார்ச் 31, 2020-ன் படி ரூ.3,067 கோடி இருந்ததாக பிஎம் கேர்ஸ் இணையதளம் தெரிவிக்கிறது. இதில் 3075.85 கோடி ரூபாய் சுயவிருப்ப பங்களிப்பு என்று அதே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தமாக ரூ.2,105 கோடி பிஎம் கேர்சுக்கு அளித்துள்ளது.

ஆனால் பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் பங்களிப்பு செய்தவர்கள் விவரம், பங்களிப்பு விவரங்கள் இல்லை.

இந்த ரூ.2105 கோடி பங்களிப்பில் ஓ.என்.ஜி.சி அதிகபட்சமாக ரூ.300 கோடி நன்கொடை அளித்துள்ளதாக ஆங்கில ஊடகத்தின் ஆர்டிஐ தகவலில் தெரியவந்துள்ளது. என்.டி.பி.சி 250 கோடி ரூபாயும் இந்தியன் ஆயில் ரூ.225 கோடி ரூபாயும் பிஎம் கேர்சுக்கு பங்களித்துள்ளதாக அந்த ஊடகம் மேற்கொண்ட தகவலுரிமைச் சட்ட தகவல் கோரலில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x